Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலிங்பெல்லை அழுத்திய நபர்…. வங்கி அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடமிருந்து நகை பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொக்கலிங்கம் தனது வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். இதனால் வீட்டின் கதவை திறந்து சொக்கலிங்கம் வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது அந்த மர்ம நபர் சொக்கலிங்கம் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சொக்கலிங்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணன் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டனர்.

Categories

Tech |