Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த ஸ்டியரிங் ராடு…. தாறுமாறாக ஓடி கவிழ்ந்த பேருந்து…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கோவிலுக்கு சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உலிமாவு கிராமத்தில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் என 20 பேர் மினி பேருந்தில் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்த பேருந்தை அப்சல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து கொலப்பள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஸ்டியரிங் ராடு எதிர்பாராதவிதமாக துண்டானது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |