கன்னி ராசி அன்பர்களே…!! இன்று பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். உங்களுடைய பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்வது சிறப்பு. தொட்ட காரியம் வெற்றி பெறக்கூடும் தொகைவரவு திருப்தியைக் கொடுக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச் செல்லும். நட்பால் நல்ல காரியம் ஒன்று நிறைவேறும். இன்று கூட்டு வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
உத்தியோகஸ்த்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையுமே திறம்பட செய்து முடித்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இன்று கிடைக்கும். மனம் அமைதியாகவே காணப்படும். கணவன் மனைவியை பொருத்தவரை இன்று அன்பு நீடிக்கும். காதல் கைக்கூடும் நாளாகவும் இன்று இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். உறவினர் வகையிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆனால் சட்டென்று கோபம் மட்டும் கொஞ்சம் தலை தூக்கும் அந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
உடல் நிலையைப் பொறுத்தவரை இன்று சுமாரான போக்கே காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். கூடுமான வரை படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு