மலேசியாவில் கொட்டி தீர்த்த கனமழையால் 6 மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளதோடு விஷ ஜந்துக்களும் இப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
மலேசியாவில் கடந்த வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் மிகவும் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் மலேசியாவிலுள்ள 6 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 21,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் வானிலை ஆய்வு மையம் மலேசியாவிலுள்ள பல மாநிலங்களுக்கு மழை தொடர்பாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதற்கிடையே மலேசியாவில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கத்தோடு சேர்ந்து வனப்பகுதிகள் ஓரமிருக்கும் வீடுகளுக்குள் விஷ ஜந்துகள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியிலுள்ளார்கள்.