பாகிஸ்தானில் 2,300 வருடங்களுக்கு முந்தைய பௌத்தர் காலத்து கோவில் கண்டறியப்பட்டு உள்ளது. அந்நாட்டின் கைபர்பாக்துன்கவா மாகாணம், ஸ்வாட் மாவட்டம், பாஸிரா நகரில் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த கோவில் கண்டறியப்பட்டது.
இதை தவிர அந்தப் பகுதியில் இருந்து 2,700க்கும் மேற்பட்ட அருள்பொருள்களும் கண்டறியப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பாக டாக்ஸிலா பகுதியில் கண்டறியப்பட்ட கோவில்களை விட, பாஸிராவில் தற்போது கண்டறியப்பட்ட கோவில் மிகப் பழமை வாய்ந்தது என்று அவர்கள் கூறினர்.