Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு…”ஞானத்தால் அனைவரையும் வசீகரப்படுத்துவீர்கள்”…வாகனம் பராமரிப்பு செலவு கொஞ்சம் இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாள் ஆகவே உங்களுக்கு இருக்கும். காலம் கடந்து செய்தாலும் காரியம் நல்லவிதமாக நடந்து முடியும். வாகனம் பராமரிப்பு செலவு கொஞ்சம் இருக்கும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறில் மாற்றம் ஏற்படும். இன்று உத்தியோக மாற்றம் உறுதியாக கூடும். இன்று பணத்தட்டுப்பாடு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனது ஞானத்தால் அனைவரையும் வசீகர படுத்துவீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் இன்று கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன்மூலம் மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். இன்று மனமகிழ்ச்சி கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் நேர்த்தி இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். கூடுமானவரை வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கு. அதோடு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |