காதலன் உயிரிழந்த மன வேதனையில் மாணவியும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகில் வடபுதுப்பட்டி பகுதியில் ரமணா என்பவர் வசித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காதல் விவகாரத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மனமுடைந்த ரமணா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் காதலனை இழந்த வேதனையில் மாணவியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.