விருச்சிக ராசி அன்பர்களே..!!! இன்று உங்களுக்கு முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாகவே இருக்கும். கையில் காசு, பணப்புழக்கம் உங்களிடம் ஓரளவு இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வீடு வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது கொஞ்சம் அந்த ஒப்பந்தத்தை சரியான முறையில் படித்து பார்த்துவிட்டு பின்னர் கையெழுத்து போடுவது ரொம்ப நல்லது. கூடுமானவரை பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள். வாகனத்தில் செல்லும்பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும். அதுபோலவே கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
கூடுமானவரை இன்று ஒருமுறைக்கு இருமுறை காரியத்தை செய்வதற்கு முன் யோசனை செய்து, பெரியோர்களிடம் ஆலோசனை செய்து செய்வது சிறப்பு. இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து சேரும். கூடுமானவரை அவர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். பிரச்சனை பெரியதாக ஆகும் என்றால் நீங்கள் பேசாமல் இருப்பதே ரொம்ப சிறப்பு.
இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள். எழுதி பார்ப்பதினால் உங்கள் மனம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்ச் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.