Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா…. அதிபர் பைடனுடன் தொடர்பு…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், தடுப்பூசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாளும் கொரோனா தொற்று குறைந்தது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தெற்கு கரோலினாவின் ஆரஞ்சு பகுதியிலிருந்து பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகருக்கு விமானத்தில் செல்லும்போது பைடனின் அரசு நிர்வாகத்தில் உள்ள ஒரு ஊழியர் பைடனுடன் 30 நிமிடங்கள் செலவிட்டுள்ளார். அந்த ஊழியருக்கு திங்கட்கிழமை நடந்த கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பைடனுக்கு நடந்த பரிசோதனையில் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இருந்தாலும் பைடனுடக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட அந்த ஊழியர் முழு அளவில் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தியுள்ளார். மேலும் பைடனுடன் பயணம் செய்வதற்கு முன் ஊழியருக்கு நடந்த பரிசோதனையில் பாதிப்பு இல்லை என முடிவு வந்திருந்தது என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |