Categories
தேசிய செய்திகள்

JUSTIN : இந்தியாவில் 200 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…. சற்றுமுன் தகவல்….!!!

முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. தற்போது வரை 90 நாடுகளுக்கு மேல் ஒமைக்ரான் தொற்று பரவி விட்டது. இந்தியாவில் முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக அப்படியே மெல்லமெல்ல ஒமைக்ரான்  வைரஸ் பல மாநிலங்களில் பரவத் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தலா 54 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஒரே நாளில் 19 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இன்று ஒமைக்ரான் பாதிப்பு 200 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. நோய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு லேசான ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாகவும், சிகிச்சை பெற்று தற்போது வரை 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் யாரும் இறக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |