லோகநாதன் என்பவர் யூடியூபை பார்த்து தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இந்த விபரீததால் லோகநாதனின் மனைவிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவத்தில் லோகநாதனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்றும் இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.