வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆழ்வார்புரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகிழம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் மகிழம்மாள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி மகிழம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.