லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் லாரி டிரைவரான ஜம்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரியில் தர்மபுரி நோக்கி சென்றுள்ளார். அப்போது வழிதெரியாமல் ஜம்பு தேனூர் சாலை வழியாக சென்றுள்ளார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் லாரியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஜம்புவிடம் இருந்த 1000 ரூபாயை பறித்தனர்.
இதனை தடுக்க முயன்ற ஜம்பு வை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து ஜம்பு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணகாந்த், அருண், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.