Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வீடு…. அலறியடித்து ஓடி வந்த பெண்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி பகுதியில் ரயில்வே கேட் கீப்பரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணேசன் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்டவை தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணேசனின் மனைவி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |