Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப்பில் உருக்கமான பதிவு…. வாலிபரின் கடைசி நிமிடங்கள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரத்தில் பாஸ்ட்புட் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு இன்னும் திருமணமாகாததை நினைத்து மன உளைச்சலில் இருந்த பால்பாண்டி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “விடைபெறுகிறேன், அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

அதன்பிறகு பால்பாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால்பாண்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |