உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கொரோனா பரவல் தொடர்பில் கூடுதல் தரவுகளை வெளியிடுமாறு சீன அரசை கேட்டிருக்கிறார்.
உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், கொரோனா தொடர்பில், மேலும் தரவுகளையும், தகவல்களையும் வெளியிடுமாறு சீனாவை கேட்டிருக்கிறார். ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதியவகை மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை காட்டிலும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
மேலும் அவர் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களையும், ஒமிக்ரான் தாக்குகிறது. கொரோனாவின் தோற்றம் கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த நாட்களை சிரமத்தோடு தான் நாம் கடக்க வேண்டியிருக்கிறது. எனவே சீன அரசாங்கம், கொரோனா தோற்றம் தொடர்பில், மேலும் தரவுகளையும் தகவல்களையும் வெளியிட வேண்டும்.
வருங்காலத்தை சிறப்பாக மாற்ற வேண்டுமெனில் கடின உழைப்பு தேவை. தற்போது நிகழும் விசயங்களின் மூலம் நாம் பாடங்களை கற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.