Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ்…. 80% பேருக்கு எந்த அறிகுறியுமே இல்லை…. மன்சுக் மாண்டவியா….!!!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களில் 80 % பேருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மாண்டவியா பேசியபோது “நாட்டில் 161 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 80% பேருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்றும், 13% பேருக்கு லேசான பாதிப்புகளே இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு ஒமிக்ரான் தொற்றை தடுக்கிறது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் தெரியும். ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவும் பட்சத்தில் அதை சமாளிக்க ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகளுடன் மருத்துவமனைகள் தயாராகி வருவதாக” அமைச்சர் தெரிவித்தார். இதனிடையில் மகாராஷ்டிராவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 54 பேரில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |