சென்னையில் ஆர்டிபிசிஆர் ஆய்வகம் மூலம் கொரோனா பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி சாலையில் தனியார் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தில் பணியாளர் 7 பேர் மூலமாக 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. பணியாளருக்கு தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்தபோது, 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.