Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு…”பேச்சில் நிதானம் தேவை”… வெளியூர் பயணத்தின் பொழுது உடைமைகள் மீதும் கவனம் வேண்டும்..!!

மீன ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுக்கு தெய்வீக நம்பிக்கை கூடும் நாளாகவே இருக்கும். சேமிப்பை உயர்த்தக்கூடிய எண்ணம் உருவாகும். திடீரென எடுத்த முடிவால் சிலரது எதிர்ப்புகளுக்கு நீங்கள் ஆளாக கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். நூதன பொருட்சேர்க்கை இன்று உண்டாகும். உங்களுடைய பேச்சில் இன்று நிதானம் வேண்டும், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அந்நிய தேசத் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும். இன்று ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதனை செயல்படுத்துவதில் கொஞ்சம் தாமதமும் சிரமமும் இருக்கும். பேச்சில் நிதானத்தை கண்டிப்பாக இன்று நீங்கள் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

அரசியல் துறையினருக்கு மற்றவருடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல், கவனமாக இருப்பது நல்லது. இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. இன்று வெளியூர் பயணத்தின் பொழுது உடைமைகள் மீதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். இருந்தாலும் பாடங்களில் மட்டும் கொஞ்சம் கடினமாக உழைத்து படியுங்கள் அது போதும். படித்த பாடத்தை நல்ல முறையாக எழுதிப் பாருங்கள், நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |