தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக 4.78 லட்சதிற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் நிவாரண தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி 9.1.2015-க்கு முன்னதாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள், காவல் நிலையத்தில் பதிவு செய்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 4 ஆயிரம் வரை வழங்கப்படுகின்றது. இதற்கு இலங்கை தமிழர்கள் காவல் ஆய்வாளரால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழின் நகல் மற்றும் அனைத்து மாவட்ட காவல் நிலையத்தில் பெறப்பட்ட வெளி பதிவில் வசிக்கும் இலங்கை தமிழர் பெயர் பட்டியல் மற்றும் தங்களின் விவரங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலமாக தமிழக அரசின் ரூபாய் 4000 நிவாரண தொகையை பெற முடியுமென்று தெரிவித்துள்ளனர்.