மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 1000 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகர் வந்த பிரதமர் மோடி பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “பெண்கள் தடையில்லாமல் கல்வி கற்கவும், தங்களின் கனவுகளை அடையவும் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற சுய உதவி குழுவை சேர்ந்த 16 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களது வங்கி கணக்கிற்கு 1000 கோடி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமூக முதலீட்டு நிதியாக 80 ஆயிரம் பெண்களுக்கு தலா 1. 10 கோடியும், சுழற்சி நிதியாக 60 ஆயிரம் பெண்களுக்கு தலா 15 ஆயிரமும் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல பெண்கள் பயன்பெற முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.