சர்க்கரை ஆலையை திறக்க வேண்டி தொழிலாளர்கள் 6-வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூரில் உள்ள வடபுதுபட்டில் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையானது அமைந்திருக்கிறது. இந்த சர்க்கரை ஆலை கடந்த மூன்று வருடங்களாக இயங்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் இந்த வருடம் அரவை பருவம் 2021-22 தொடங்க வேண்டும் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க கோரியும் மற்றும் 50 ஆயிரம் மெகா டன் போதிய கரும்பு உள்ள நிலையில் தமிழக அரசு அலையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் அதிகமான தொழிலாளர்கள் 6-வது நாளாக சர்க்கரை ஆலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.