காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கிய வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்குழி கிராமத்தில் பசிக்கும் வாலிபரும், இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு உடந்தையாக இருந்ததாக நினைத்து வாலிபரிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்த ராஜேஷ் என்பவரை வீடு புகுந்து தாக்கி கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணின் அண்ணன், தாய்மாமா உள்பட 5 பேரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். தற்போது அந்த பெண்ணின் தாய் மாமாவான கொளஞ்சி என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.