Categories
தேசிய செய்திகள்

மீன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம் …. சூடுபிடிக்க ஆரம்பித்த வியாபாரம்…!!!

பாடா ஆற்றின் புகழ்பெற்ற ஹில்சா மீன்களை வாங்கினால் ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில்,யாரவது  நாம் பொருட்களை வாங்கும் போது வெங்காயம் இலவசமாக பெற முடியுமா ? என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் . இதன் காரணமாக வெங்காயத்தை கொண்டு  சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.  இவற்றை போன்ற சலுகைகள் நாடு முழுவதும் பரவியுள்ளன. அதில் முக்கியமானது  “ஒரு சலுகை ஒரு செல்போன் வாங்கினால்,  ஒரு கிலோ வெங்காயம் இலவசம்” என்ற சலுகை.

Image result for onion

மேலும் அசைவ ஓட்டல்களிலும் வெங்காயம் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகின்றது. மேற்கு வங்க மாநிலத்தில்  மீன் மார்க்கெட் வணிகர்கள் இதேபோல சில சலுகைகளை கொடுத்து  வருகின்றனர். வியாபாரிகள் ரூ.1300 மதிப்புள்ள உள்ள பாடா ஆற்றின் புகழ்பெற்ற ஹில்சா மீன்களை வாங்கினால் ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளனர். கடைக்கு வெளிப்புறம் விளம்பரத்தைப் பார்த்த உடன், மீன் மார்க்கெட்டிற்கு மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது.இதற்கு முக்கிய காரணம் உச்சத்தில் இருக்கும் வெங்காயத்தின் விலையே.

தொடக்கத்தில் கொல்கத்தாவின் மீன் தொழிலதிபர் பாபு 2, 3 மீன்களை மட்டுமே விற்பனை செய்து கொண்டிருந்தார். தற்போது திடீரென லாட்டரி அடித்தது போன்று மக்கள் கூட்டத்தால் மீன்களின்வியாபாரம் அதிகரித்துள்ளது.

Categories

Tech |