இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிக்கு விஜயசாந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயசாந்தி மணியை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஊரில் இருக்கும் விவசாய கிணற்றில் விஜயசாந்தியின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விஜயசாந்தியின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயசாந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை வீசி சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.