மூதாட்டியை ஏமாற்றி தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் பெரியசாமி-வள்ளியம்மை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த மூதாட்டி அவரது வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் அங்கு சென்று உங்களது நகையை கொடுத்தால் நாங்கள் பணம் தருகிறோம் என மூதாட்டியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி அந்த மர்ம நபர்களிடம் தங்க நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு மர்ம நபர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வள்ளியம்மை குன்னம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு காவல்துறையினர் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.