Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை தகவல்….!!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த இரு மாநிலங்களிலும் 54 பேருடன் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக நபர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் மொட்டை மாடியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |