ஜப்பான் நாட்டின் பிரபல பாடகி, தான் தங்கியிருந்த ஓட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டின், பிரபல பாடகியான சயாகா கன்டா, மாட்சுடா சீகோ என்ற பிரபல பாடகரின் மகளாவார். இவர், கடந்த சனிக்கிழமை அன்று சப்போரோ திரையரங்கில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனவே, அவரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த சமயத்தில் அவரின் நிறுவனம், சயாகா கன்டா, தங்கியிருந்த ஓட்டலின் 6-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவித்தது. எனவே, காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த ஓட்டலின் நீச்சல் குளத்தில் அவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பியுள்ளனர். தற்போது, இச்சம்பவம் தொடர்பில், பிற தகவல்கள் வெளியாகவில்லை. எனவே, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.