‘பிக்பாஸ் 5’ இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார்.
இதனையடுத்து, இந்த வார நாமினேஷன் பட்டியலில் பிரியங்கா, சிபி, வருண், பாவணி, அக்ஷரா மற்றும் நிரூப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், இதுவரை பதிவாகியுள்ள ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் பாவணி மற்றும் அக்ஷரா குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்களில் ஒருவர் தான் வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.