ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார துறை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கடிதத்தில், ஓமிக்ரோன் டெல்டா வகை வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதனால் உள்ளூர் மட்டத்திலேயே ஒமைக்ரனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். குறிப்பாக திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்த அளவில் மட்டும் நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
அதைத்தவிர மாவட்ட அளவிலான கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கடந்த ஒரு வார காலமாக 10% அளவிற்கு கொரோனா கண்டறியப்பட்ட அந்த பகுதியில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் தனிமை படுத்தி இருக்கும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய மாநிலங்கள் மட்டும் மாவட்டங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.