கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், கடந்த ஒரு வார காலமாக 10% அளவிற்கு கொரோனா கண்டறியப்பட்ட அந்த பகுதியில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் தனிமை படுத்தி இருக்கும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய மாநிலங்கள் மட்டும் மாவட்டங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.