அனைவருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாக இருக்கும். தற்போதைய கொரோனா நெருக்கடியான சமயத்தில் நமக்கு என்று சொந்த வீடு இல்லையே என்ற கவலை பலருக்கும் உண்டு. வீடு வாங்குவதற்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும் . எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்? எவ்வளவு வட்டியில் கிடைக்கும் ?ஏதேனும் சலுகைகள் உள்ளதா? என்பதை ஆலோசனை செய்து வாங்க வேண்டும். தற்போதைய சூழலில் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் இருக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். பல்வேறு வங்கிகளில் வழங்கப்படும் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி
யூனியன் பாங்க் ஆப் இந்தியா 6.4 சதவீதம்,
பேங்க் ஆப் மஹிந்திரா 6.4 சதவீதம்,
பேங்க் ஆஃப் பரோடா 6.5%,
பேங்க் ஆப் இந்தியா 6.5%,
கோடக் மகேந்திரா 6.5%,
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி 6.6 சதவீதம்,
ஐசிஐசிஐ 6.75%,
ஆக்சிஸ் வங்கி 6.75% ,
ஐடிபிஐ 6.75%,
எஸ்பிஐ லோன் 6.75%,
இந்தியன் வங்கி 6.8 சதவீதம்,
எச்டிஎஃப்சி 6.9 5% வழங்கப்படுகின்றது.