Categories
உலக செய்திகள்

எல்லை மீறும் ஒமிக்ரான்…. லாக்டவுன் போடலாமா?.. வேண்டாமா?…. உலக நாடுகள் ஆலோசனை….!!!!

ஒமிக்ரான் வைரஸ் எல்லை மீறி பரவி வருவதால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தயாராகி வருகிறது.

தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நப்தாலி பென்னட் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றவும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீடுகளை விட்டு வெளியே வரவும் அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க நாட்டுடனான பயணங்களுக்கும் இஸ்ரேலில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் நப்தாலி பென்னட் அமெரிக்காவை சிவப்பு பட்டியலில் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பார் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நெதர்லாந்தில் ஊரடங்கு கட்டுபாடுகள் ஜனவரி 14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரிட்டனில் ஒமிக்ரான் வைரஸ் எல்லை மீறி அதிகரித்து வரும் நிலையில் கிறிஸ்துமஸுக்கு முன்பாக கட்டுப்பாடுகள் அமலுக்கு வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாவித், மருத்துவ வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |