நாடு முழுவதும் ஓப்போ மொபைல்கள் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் ஒப்போ மற்றும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் நாடு முழுவதும் கிளை அமைத்து நிறுவனத்தை விரிவுபடுத்தி வருகின்றன. இந்நிலையில் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.