அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளக்காடு புதூரில் உள்ள வீட்டுமனைகளை பொதுமக்கள் பலர் வாங்கி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டு மனைகளுக்கு போதிய வழித்தடங்களும், அடிப்படை வசதிகளும் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தபின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.