மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் தற்கொலை செய்துகொண்ட 122 மாணவர்களில் 24 பேர் எஸ்சி, 2 பேர் எஸ்டி, 41 பேர் ஓபிசி, 3 பேர் சிறுபான்மை பிரிவினரை சேர்ந்தவர்கள் என்று அமைச்சர் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அரசால் வெளியிடப்பட்ட நிறுவனம் ரீதியாக புள்ளிவிவரப் பட்டியல்படி, ஐஐடியில் 34 மாணவர்களும், ஐஐஎம்மில் 5 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட 34 மாணவர்கள் 5 பேர் எஸ்சி, 13 பேர் ஓபிசி பிரிவினரை சேர்ந்தவர்களாவர். கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பல்கலைக்கழகங்களில் தான் அதிக அளவில் 37 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபற்றி அமைச்சர் தனது பதிவில் கல்வி அழுத்தத்தை குறைக்கும் வகையில் தொழில்நுட்ப கல்வியை பிராந்திய மொழிகளில் அறிமுகப்படுத்துதல், கற்றலில் மாணவர்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் செய்து வருகின்றனர். அதன்பின்னர் வார்டன்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் சக மாணவர்களின் மனநிலை சோர்வாக இருப்பதை கவனித்தால், உடனே அதை அதிகாரிகளிடம் கூற வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை அவர்களுக்கு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.