Categories
தேசிய செய்திகள்

அடடே இப்படி ஒரு பாசமா!…. அம்மாவை சந்தோசப்படுத்த மகள் செய்த காரியத்தை நீங்களே பாருங்க….!!!

இளம் பெண் ஒருவர் தன்னுடைய அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு காதல் தோற்றுப் போனால் மற்றொரு காதல் மலர்வது உண்டு. ஆனால் அந்த நடைமுறை நம் கலாச்சாரத்தில் எப்போதோ புகுந்துவிட்டது எனஎன்றாலும், சமூகத்தில் சில கட்டுப்பாடுகள் இன்னும் இருந்து வருகிறது.

அந்த வகையில் திருமணமான ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. கணவனை இழந்த அல்லது பிரிந்த பல மனைவிமார்கள் தங்களுடைய குழந்தைகளுக்காகவும் முக்கியமாக சமூகம் என்ன சொல்லுமோ என்பதற்காகவும் மறுமணம் செய்து கொள்ளாமலேயே தங்களுடைய காலத்தை ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இளம் பெண் ஒருவர் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளை டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Categories

Tech |