Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு பணியிட மாறுதல் கட்டாயம்…. பள்ளிக்கல்வித்த்துறை அதிரடி…!!!!

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கட்டாய இடமாறுதல் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதால் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டு வருவதை தடுக்கும் விதமாக கலந்தாய்வில் மாறுதல் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வட்டார கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி முடிக்காதவர்கள் விருப்பத்தின் பேரில் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். வரும் 28ஆம் தேதி காலை மாவட்டத்திற்குள்ளும்,  மாலை மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |