Categories
அரசியல்

ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கில்….. ரூ.2 லட்சத்திற்கான பலன் கிடைக்குதாம்…. உடனே போங்க…!!!

பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்பவர்களுக்கு சரியான சாய்ஸ் ஜீரோ பேலன்ஸ் அக்கௌன்ட் ஓபன் செய்வது தான். ஏனெனில் இதில் குறைந்த பட்ச இருப்புகள் எதுவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

நாட்டில் பெரிய பெரிய வங்கிகளும் உள்ளன. அதேபோல் சிறு வங்கிகளும் உள்ளது. இருப்பினும் அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான சேவைகள் வழங்குவதில்லை. இவைகளின் வட்டி விகிதங்களில் ஏராளமான மாற்றங்கள் உள்ளன.  ஜீரோ பேலன்ஸ் கணக்கு சேவைகள் இரண்டு வகையான வங்கிகளிலும் கிடைக்கின்றன. நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க முடியாதவர்களுக்கும், இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கு மிகவும் சிறந்தது. சில வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கின் வட்டி விகிதங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்:

முதல் சேமிப்புக் கணக்கு என்ற பெயரில் இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கை தொடங்க முடியும். இதன் வட்டி 4 சதவீதம் ஆகும். தினசரி ஏடிஎம் பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.40,000. இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு இலவசமாக கிடைக்கிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா:

எஸ்பிஐயில் அடிப்படை சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்கு என்ற பெயரில் ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் தொடங்க முடியும். இதில் வட்டி விகிதம் 2.7 சதவீதம். ஏடிஎம் டெபிட் கார்டு ரூ. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் சேவைகள் உள்ளன.

யெஸ் பேங்க்:

ஸ்மார்ட் சாலரி அட்வான்டேஜ் அக்கவுண்ட் என்ற பெயரில் இங்கு கிடைக்கும். வட்டி விகிதம் 4 சதவீதம். ஊழியர்கள் மட்டுமே இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் திறக்க முடியும்.

எச்டிஎஃப்சி பேங்க்

சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு என்ற பெயரில் ஜீரோ பேலன்ஸ் கணக்கை ஹெச்டிஎஃப்சி வங்கியில் தொடங்கலாம் . வட்டி விகிதம் 3 சதவீதம். மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தக் கணக்கைத் திறக்க முடியாது.

கோடக் மஹிந்திரா பேங்க்

811 டிஜிட்டல் வங்கி கணக்கு ஜீரோ பேலன்ஸ் கணக்கை கோடக் வங்கியில் தொடங்கலாம். வட்டி விகிதம் 3.5 சதவீதம். வீடியோ KYC மூலமாகவும் இந்தக் கணக்கைத் திறக்கலாம்.

Standard Chartered Bank

Easy / BSBDA என்ற பெயரில் கணக்கை திறக்கலாம். வட்டி விகிதம் 2.75 சதவீதம். கணக்கில் தினசரி இருப்பு அடிப்படையில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி செலுத்தப்படுகிறது.
இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு கிடைக்கும்

 

Categories

Tech |