Categories
மாநில செய்திகள்

விசாரணையின்போது வழக்கறிஞர் செய்த சேட்டை….. கடுப்பான நீதிபதிகள்…. போட்ட அதிரடி உத்தரவு….!!!

விசாரணையின் பொழுது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்குகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணொளிக்காட்சி விசாரணையின் பொழுது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை வழக்கறிஞராக தொடர தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஆரம்பித்தபோது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுவதும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி காட்சிகள் மூலமாக விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது.

நீதிமன்ற விசாரணையின்போது ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருந்தபோது வழக்கறிஞர் ஒருவர் கேமரா ஆனில் இருப்பது தெரியாமல் ஒரு பெண்ணுடன் இணைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்தது. இந்த சம்பவம் சக வழக்கறிஞர் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள நீதிபதிகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்வதற்கு தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அதனை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி டிசம்பர் 23ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்துள்ளார்.

Categories

Tech |