Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ஜோ ரூட் மோசமான சாதனை ….! விவரம் இதோ ….!!!

ஆஷஸ்  தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான  2-வது டெஸ்டில்  தோற்றதன் மூலம் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மோசமான சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது .இதில் கடந்த 16-ஆம் தேதி . 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது இதில் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி போட்டியை டிரா செய்ய போராடியது .ஆனால் ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .இதனால் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது .

இதற்கு முன்பு இரு அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது .இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டன் என பெயரெடுத்த ஜோ ரூட் தற்போது மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் .ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சந்தித்த 23-வது தோல்வி இதுவாகும் .இதன் மூலம் டெஸ்ட் தொடரில் அதிக தோல்வியை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக்கின் (22 தோல்வி)  மோசமான சாதனையை ஜோ ரூட்(23 தோல்வி)  முறியடித்துள்ளார்.

Categories

Tech |