தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பள்ளி மாணவ மாணவியர்களின் பாடப்புத்தகத்தில் பாலியல் தொடர்பான புகாரில் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் அடிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவியர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல மாணவியர்கள் தற்கொலை என்ற தவறான முடிவை மேற்கொள்கின்றன. இதனை தடுக்க அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றது. மேலும் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. இதனால் வரக்கூடிய கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் எல்லா புத்தகங்களிலும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் அச்சிடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இலவச அழைப்பு எண்கள் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் இடம் பெறச் செய்துள்ளது. அரசு ஆசிரியர்களை பொறுத்தவரை போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக தர்மபுரி மாவட்டத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புத்தக அட்டையில் நிமிர்ந்து நில் துணிந்து செல் என்ற வாசகம் அடங்கிய துண்டு சீட்டு விழிப்புணர்வு மற்றும் புகார் எண் சீல் வைக்கப்பட்டுள்ளது. ரப்பர் ஸ்டாம்ப் சீலில் குழந்தைகள் உதவி எண் 1098, மாவட்ட ஆட்சியரின் உதவி எண் 1077, மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ்அப் எண் 8903891077 மற்றும் கல்வி வழிகாட்டி மையம் 14417 உள்ளிட்ட 4 தொலைபேசி எண்கள் அதில் இடம் பெற்றுள்ளது.