சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு அருகில் இருக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் இரவு நேரத்தில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. இந்த வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்லபாண்டியன், வெற்றி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய நகர் செம்மஞ்சேரி பகுதியில் வசிக்கும் தியாகராஜன் என்பதும், அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதும் தெரியவந்துள்ளது.