பாகிஸ்தான் வீரர் அபித் அலிக்கு போட்டியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வலதுகை பேட்ஸ்மேனான அபித் அலி அந்த அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதோடு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 1180 ரன்கள் குவித்துள்ளார் . இந்நிலையில் 34 வயதான அபித் அலி குயாய்ட்-இ-ஆசாம் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானில் மத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளார்.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியின்போது அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது .அப்போட்டியில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நெஞ்சுவலி காரணமாக பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறினார் .இதன்பிறகு அவர் மருத்துவமனைக்கு சென்று முறையான பரிசோதனை மேற்கொண்டார் .தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .