Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வேலை கிடைச்சா தான் கல்யாணம்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரம்பலூரில் சோகம்…!!

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூரிய பிரகாஷ் தனக்கு வேலை கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும், அதுவரை என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தகுந்த வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து சூரிய பிரகாஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் சூரியபிரகாஷ் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது சூரிய பிரகாஷ் சடலமாக தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூரிய பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |