உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே “ஒமிக்ரான்” என்ற உருமாறிய வைரஸ் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விடுமுறைக்கு திட்டமிட்டு வருகின்ற தருணத்தில் அவற்றை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஒரு நிகழ்ச்சியை ரத்து செய்வதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. “நமக்கு உயிர் தான் முக்கியம்” இப்போது ஜாலியாக புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி விட்டு பின்னர் வருத்தப்படுவதை விட இப்போது இந்த கொண்டாட்டத்தை ரத்து செய்து கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.