பெண்ணை தாக்கிய முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரைக்கோட்டை பகுதியில் மணிகண்டன்-ஜெயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயஸ்ரீ தனது வீட்டிற்கு அருகே நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அருகில் இருக்கும் வயல்வெளியில் இருந்து ஓடி வந்த 2 முகமூடி கொள்ளையர்கள் ஜெயஸ்ரீ அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் ஜெயஸ்ரீ தாலி சங்கிலியை பிடித்துக்கொண்டு அலறி சத்தம் போட்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள் ஜெயஸ்ரீயை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயமடைந்த ஜெயஸ்ரீயை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து ஜெயஸ்ரீ அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.