கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. மேலும் கடந்த ஒரு வார காலமாக 10% அளவிற்கு கொரோனா கண்டறியப்பட்ட அந்த பகுதியில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
மத்திய அரசின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி. போடாதவர்களுக்கு அனுமதி ரத்து, திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி என்று தகவல் வெளியாகி உள்ளது.