டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கதிர்நாயக்கனஅள்ளி கிராமத்தில் அருள்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் கவிஸ்ரீ என்ற மகன் இருந்தார். இதில் அருள்மொழியின் சகோதரர் சிவகுமார் ஸ்கூட்டரில் சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து வந்தார். இதனையடுத்து வீட்டிற்கு அவர்கள் மீண்டும் சென்று கொண்டிருந்தனர். அப்போது தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் நல்லாம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டுள்ளார்.
இதன் காரணமாக நிலை தடுமாறிய சிவகுமார் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் டிராக்டரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குளானது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சிவக்குமாரும் பலத்த காயம் அடைந்தார். அதன்பின் அப்பகுதியில் இருந்தவர்கள் சிவகுமாரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.