பேருந்து படிக்கட்டில் பயணிகளை பயணம் செய்ய அனுமதித்த கண்டக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை தினசரி மார்க்கெட் சந்திப்பு அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஈரோட்டில் இருந்து தாராபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் படிக்கட்டுகளில் சிலபேர் படியில் நின்றபடி பயணம் மேற்கொண்டனர்.
இதனை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர் அந்த பேருந்தை நிறுத்தினார். அதன்பின் படிக்கட்டில் நின்றபடி பயணிகள் பயணம் செய்ய அனுமதித்த அந்த பேருந்து கண்டக்டருக்கு 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு பேருந்து படிக்கட்டில் பயணிகள் பயணம் செய்வது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கண்டக்டருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.